மேல் மாகாண அரச சேவையில் பட்டதாரி ஆசிரிய பதவிக்கு நியமித்தல்

இலங்கை ஆசிரிய சேவையின் 3 – I (அ) மற்றும்கல்வியியல் 2-II தர நியமனம் வழங்கல் நிகழ்வு

 

மேல் மாகாண அரச சேவையில் பட்டதாரி ஆசிரிய பதவிக்கு நியமனம் பெறும் 3-I(அ) மற்றும் கல்வியியல் 2-II தர நியமனம் பெறுவோருக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வு மேல் மாகாணசபையின் புதிய கட்டிடத் தொகுதியில் கீழுள்ளவாறு நடைபெறும்.

திகதி– 2021.01.25

இடம்மேல் மாகாணசபையின் புதிய கேட்போர் கூடம்

 

01ம் கட்டம் ஆசன இலக்கம்

01 – 140

மு.ப.9.00மணிக்கு உரிய இடத்திற்கு வருகை தந்து அமர்ந்திருத்தல் வேண்டும்.
02ம் கட்டம் ஆசன இலக்கம் 01 – 140 மு.ப.11.30 மணிக்கு உரிய இடத்திற்கு வருகை தந்து அமர்ந்திருத்தல் வேண்டும்.

நியமிக்கப்பட்டவர்களின் பட்டியல்

01ம் கட்டம்⇒

02ம் கட்டம்⇒

நியமனங்களை பொறுப்பேற்பதற்காக மேல் மாகாணசபையின் புதிய கட்டிடத் தொகுதிக்கு சமூகமளிக்கும் நீங்கள் கீழ்வரும் ஆலோசனைகளைக்கமைவாக செயற்படுதல் அவசிம்.

 

  • 01.25தேதி மேலுள்ளவாறு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் மாத்திரம் சமுகமளித்தல் அவசியம். அவ்வாறு சமூகமளிக்க இயலாவிடின்0112093136 / 0112092883எனும் இலக்கங்களை அழைத்து வேறு தினமொன்றை ஒதுக்கிக்கொள்ளவும்.
  • கர்ப்பிணித்தாய்மார் / சிறு குழந்தைகளுடைய பெண்கள் மேலுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து வேறு தினமொன்றை ஒதுக்கி இவ்வமைச்சிற்கு வருகை தந்து நியமனங்களைப் பொறுப்பேற்றல் மிகவும் உசிதமாகும் என அன்புடன் அறியத்தருகிறேன்.
  • நியமனங்களை பொறுப்பேற்பதற்காகநியமனம்வழங்கப்படுபவரே சமுகமளித்தல் அவசியம். எக்காரணத்திற்காகவும் வேறு தரப்பினரிடம் நியமனக் கடிதம் வழங்கப்பட மாட்டாது.
  • மேலும் நியமனங்களை பொறுப்பேற்பதற்காக நியமனம்வழங்கப்படுபர் மாத்திரம் அலுவலகத்திற்குள் வருகை தருவதுடன், எக்காரணத்திற்காகவும் அவருடன் அல்லது அவளுடன் வேறு எந்தவொரு தரப்பினருக்கும் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதியளிக்கப்படமாட்டாது.
  • நியமனங்களை பொறுப்பேற்பதற்காகவருகைதரும் போது தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியான ஒரு அடையாள அட்டையொன்றை (கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரம்) கொண்டு வருதல் கட்டாயமானதாகும்.
  • கொவிட்19 நோயத் தொற்று காரணமாக தமது சுகாதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் வருகை தரும்போது முகக்கவசம் அணிந்திருத்தல் மற்றும் உரிய சுகாதாரப்பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுதல் கட்டாயமானதாகும்.
  • நியமனங்களை பொறுப்பேற்கும் விடயங்களுக்காக நீல அல்லது கறுப்பு நிற பேனாவொன்றை தம்வசம் வைத்திருத்தல்சிறந்தது.
  • பொருத்தமான உடையணிந்து சமுகமளிக்கவும்.
  • **நியமனம் பெறுவோரின் பெயர்ப்பட்டியலில் உங்களுக்குரிய ஆசன இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நியமன வழங்கலின் பதிவு நடவடிக்கைகளுக்காக உமது ஆசன இலக்கத்தினை அமைச்சு அலுவலர்களுக்கு தெரிவித்தல் அவசியமாகும்.
All Rights Reserved. © 2017 Education Ministry (W. P.) - Last Modified On Jan 20, 2021 @ 8:51 am – Designed By ITRDA