இடைநிலை வகுப்புகளுக்கு பிள்ளைகளைச் சேர்க்க கடிதங்கள் வழங்கப்படமாட்டாது

இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது எனவும், 2024 ஆம் ஆண்டு இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அறியத்தரப்படுகின்றது.

அந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின் அதிபர்கள் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் நேர்காணல்களை நடத்தி தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை கல்வி அமைச்சின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார்கள்.

மேலும், இடைநிலை தரங்களுக்கு பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பான கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சை அணுக வேண்டாம் என்றும் அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.

அறிவித்தல்

மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் மற்றும் தற்காலிகமாக இணைப்புச் செய்தல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதங்கள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மாத்திரம் அமைச்சினால் வழங்கப்படும் என்பதால் அந்த நாட்களில் மாத்திரம் அமைச்சிற்கு சமூகமளிக்குமாறு தயவுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது.

All Rights Reserved. © 2017 Education Ministry (W. P.) - Last Modified On Sep 27, 2024 @ 9:47 am – Designed By ITRDA