கௌரவ அமைச்சர் அவர்களின் செய்தி

மேல்மாகாண சபை வரலாற்றிலே முதன்முறையாக கலாச்சாரம், கலை அம்சங்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் தகவல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்து விடயங்களும் ஒன்றிணைந்த வகையில் பூரண ஆளுமைமிக்க பிரஜைகளை தேசத்திற்கு தாரைவார்க்கக் கூடிய வாய்ப்பொன்று மேல்மாகாண கல்வி அமைச்சுக்கு உருவாகியுள்ளதை முதலில் குறிப்பிட்டாக வேண்டும்.

எதிர்கால வேலை உலகிற்கு பொருத்தமான செயற்றிறன்மிக்க அறிவாற்றலுடன் ஒழுக்காற்று பண்புகளைக் கொண்ட மாணவ, மாணவிகளை உருவாக்கும் மிகவும் பாரதூரமான பொறுப்பு வாய்ந்த பணியின் தன்மையினை விளங்கி, குறிப்பிட்ட செயற்பாட்டின் அளவிற்கேற்ப பொருத்தமான சகல விடயங்கனையும் சிறப்பாக திட்டமிடும்போதே அவை செயற்படுத்தக்கூடிய நிலைக்கு உள்வாங்கப்படும் என்பதை குறிப்பிடல் வேண்டும்.

விஷேடமாக; மேல்மாகாண அடைவுமட்டம் உயர்வடைவதற்கான வேலைத்திட்டம் சிறப்பான முகாமைத்துவ முறையினுள் உள்வாங்கப்பட்டதனால், நாங்கள் தற்போது பாராட்டப்படும் நிலைக்கு வந்துள்ளோம். இவற்றுக்கு மேலாக, வெற்றிகரமான கற்றல் – கற்பித்தல் செயற்பாடு தொடர்பாக, அவசியமான மனித மற்றும் பௌதிக வளங்கள் சிறப்பாக முகாமை செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அனைவருக்கும் கல்வியில் சம வாய்ப்பினை உருவாக்கும் உறுதியுடன் கஷ்டப் பிரதேசங்களில் பாடசாலைகளை கட்டியெழுப்புவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்படுகின்றன.

இவை மட்டுமல்லாது, பிள்ளைகள் குணநலன்களில் சிறந்தவர்களாக இருக்க வேண்டுமென்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். “ விழுமிய விருத்தி வேலைத்திட்டம்” சகல பாடசாலைகளிலும் செயற்படுத்தப்படல் வேண்டுமென்பதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வியினூடாக மேல்மாகாணத்தினை உயர்நிலையில் நிலைநிறுத்தல் எமது ஒன்றிணைந்த இலக்காகும்.

விளையாட்டு செயற்பாடுகள் மேம்பாடு தொடர்பாக கிடைக்கப் பெற்ற பெறுபேறுகள் முறையாக முகாமை செய்வதினூடாக; இம்முறை நிறுவனங்கள்சார் விளையாட்டுவிழா சிறப்பாக அதிலும் கூடுதலாக மேல்மாகாணத்தில் இடம்பெறுவதை உண்மையிலேயே வரவேற்கின்றேன்.

எமக்கு உட்பட்ட மேல்மாகாண அழகியல் நிறுவனங்களின் செயற்பாடுகள், முறையான திட்டமிடலுக்கேற்ப முன்னேறிச் செல்கின்ற வகையில்; நாட்டியக் கலைஞர்களின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப வசதிவாய்ப்புகள் பெற்றுக்கொடுத்ததினால், அவர்கள் தமது நடவடிக்கைகளை இலகுவாக செய்து முடிப்பதற்குரிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. எதிர்பாராத வகையில், அழகியல் நிறுவனங்களின் வருமானமானது உயர்வடைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா தொடர்பான வாய்ப்பு நாட்டியக் குழுக்களுக்கு கிடைத்துள்ளது.

இவற்றை தவிர பயனுறுதிமிக்க தகவல் தொடர்பாடல் துறை தொடர்பான உள்வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றன. தகவல் தொடர்பாடலினூடாக திறமை வாய்ந்த பிள்ளைகளை தேசத்திற்கு தாரைவார்க்கும் நவீன தேவைப்பாடொன்றினை நான் காண்கின்றேன்.

நாளைய உலகை வெற்றிக்கொள்ளும் கனவை, நனவாக்கும் எதிர்கால பாதைகளை திறந்து விடுவதற்கு; தற்கால மாகாண கல்வி அமைச்சர் என்ற வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எனது அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட காரியாலய அதிகாரிகள், திட்டமிடல் பிரிவு மற்றும் பிரத்தியேக அதிகாரிகள் எனக்கு வழங்கும் ஒத்துழைப்பினை வரவேற்கின்றேன்.