தீபாவளி திருநாளின் கலாசார விழாவும் விரிவுரையும் மேல்மாகாண அழகியல் நிறுவகத்தில் 2016 நவம்பர் மாதம் 04ஆம் திகதி காலை மு.ப.9.00 மணிக்கு தேசிய கலந்துரையாடல் கௌரவ அமைச்சர் திரு. மனோ கணேசன் அவர்களின் தலைமையிலும் மேல்மாகாண கல்வி, கலை கலாசார நடவடிக்ககைகள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் அத்துடன் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான கௌரவ அமைச்சர் திரு.றஞ்சித் சோமவங்ச அவர்களின் வழிகாட்டலின் கீழும் நடைபெறும்.